நாடு முழுவதும் விவசாய அமைப்பினர் போராட்டம் – ரயில்கள் ரத்து.!
நாடு முழுவதும் விவசாய அமைப்பினர் போராட்டம் நடத்தி வருவதால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் வேளாண் மசோதாக்களுக்கு நிறைவேற்றப்பட்டன. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மொத்தம் 31 விவசாயிகள் அமைப்புகள் இன்று நாடு முழுவதும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
அந்த வகையில், இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்படுவதைக் கண்டித்து, விவசாயிகள் இன்று நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்தி வருவதால், போலீசார் தடுப்பு பணிகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. ஹரியானா மாநிலம் சிர்சா பகுதியில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, பஞ்சாபில் நடைபெற்று வரும் போராட்டத்தினால் இன்று 14 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பஞ்சாப் மற்றும் ஹரியானா முழுவதும் பலத்த பாதுகாப்புடன் காவல்துறையினர் குவித்துள்ளனர்.