போராடும் விவசாயிகளுக்கு எதிராக டெல்லி காவல்துறையினர் சாலைகளில் ஆணிகள் மற்றும் முள் வேலிகள் அமைத்துள்ள நிலையில், அதே சாலைகளில் சாலையில் விவசாயிகள் பூக்களை நட்டு வருகின்றனர்.
மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் தொடரும் நிலையில் சிங்கு எல்லையில் கடந்த குடியரசு தினத்தன்று கலவரம் ஏற்பட்டது. இதனை அடுத்து டெல்லி எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் டெல்லி காவல்துறையினர் காங்கிரீட் தடுப்புகள், முள்வேலிகள் மற்றும் தரைகளில் ஆணிகள் ஆகியவற்றை பதித்துள்ளனர்.
விவசாயிகள் கூடுவதையும் அவர்கள் போராட்டத்தையும் தடுக்கும் விதமாக டெல்லியில் காவல்துறையினர் செய்துள்ள முள்வேலி பாதுகாப்புக்கும் சாலையில் பதித்துள்ள அணிகளுக்கும் பதிலடியாக காசிப்பூர் எல்லையில் விவசாயிகள் பலர் இணைந்து பூச்செடிகள் நட்டு வருகின்றனர். இது குறித்து விவசாய சங்கத் தலைவர்களில் ஒருவரான ரமேஷ் திகைத் அவர்கள் கூறுகையில், காவல்துறையினர் எங்களுக்காக ஆணிகளை சாலையில் பதித்தாலும், நாங்கள் அவர்களுக்காக பூக்களை நட திட்டமிட்டுள்ளோம். ஏனென்றால் எங்களுக்கு நடுவது சிரமமான வேலை கிடையாது என கூறியுள்ளார்.
பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்…
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை பிடிக்க ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ட்ரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன்…
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம்…
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 மாலை நடந்த பயங்கரவாத தாக்குதலில்…
நாட்டையே உலுக்கிய ஜம்மு-காஷ்மீர் பாஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கர பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஒரு நாள் கழித்து, பாகிஸ்தான்…