பிரதமர் மோடி அவர்கள் பதவியேற்ற ஏழாவது ஆண்டு நிறைவு தினமான இன்றைய தினத்தை கறுப்பு தினமாக அனுசரிக்க விவசாய அமைப்புகள் முடிவு செய்துள்ள நிலையில், இதற்கு ஆதரவு தெரிவிப்பதாக மதிமுக பொதுச் செயலர் வைகோ அவர்கள் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2014 ஆம் ஆண்டு மே 26ம் தேதி பாஜக அரசு பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இன்றுடன் பிரதமர் மோடி பதவியேற்று ஏழு ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில், இந்த நாளை கறுப்பு தினமாக அனுசரிக்க விவசாயிகள் அமைப்பு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இதற்கு ஆதரவு தெரிவிப்பதாக மதிமுக பொதுச் செயலர் வைகோ அவர்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 2014 மே 26ஆம் தேதி பாஜக அரசு பொறுப்பேற்று நரேந்திர மோடி இந்தியாவின் 14-வது பிரதமராக பதவி ஏற்ற தினம் இன்று. மே 26ம் தேதியுடன் 7 ஆண்டு நிறைவு பெறுவதற்குள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஆட்சியை கேள்விக்குறியாகி விட்டது எனவும் நாடாளுமன்ற ஜனநாயகம் ஆழ குழிதோண்டி புதைக்கப்பட்டு விட்டது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனநாயகத்தின் தூண்களான நீதித்துறையும், பத்திரிக்கை, ஊடகத்துறையும் நிர்பந்திக்கப்படுவதாகவும், நிர்வாகத்துறையில் முழுவதும் காவி பாசி படர்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். நாட்டின் பன்முகத்தன்மையை அழித்து ஒரே கல்வியி எனும் ஒற்றைத் தன்மையை திணித்து இந்து- இந்தி- இந்துராஷ்டிரா எனும் இந்துத்துவ சனாதன சக்திகளின் நீண்டகால திட்டங்களை செயல்படுத்திட ஆட்சி அதிகாரத்தை மோடி அரசு பயன்படுத்தி வருகிறது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், ஜிஎஸ்டி பணமதிப்பிழப்பு போன்றவற்றால் ஏற்பட்ட வீழ்ச்சியிலிருந்து இன்னும் உற்பத்தி தொழில் துறை மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மீள முடியாமல் இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் விவசாயிகளின் போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்த கூடிய சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பின் மூலம் அகில இந்திய விவசாயிகளின் கூட்டமைப்பின் தலைவர்கள் நரேந்திர மோடி பிரதமர் பதவியேற்று 7 ஆண்டுகள் நிறைவடையும் நாளான மே 26-ஆம் தேதி கருப்பு நாளாக கடைபிடிக்க வேண்டும் என பிரகடனம் செய்துள்ளதாகவும் இந்த கருப்பு நாள் போராட்டத்திற்கு விவசாயிகள் கூட்டமைப்பு அறைகூவல் விடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறியுள்ளதுடன் இப்போராட்டத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தனது ஆதரவையும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று நாடு முழுவதும் விவசாய அமைப்பு கருப்பு தினமாக அனுசரித்து வருகிறது.
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…
கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…