நாட்டின் முன்னேற்றத்திற்கு பின்னால் விவசாயிகள் உள்ளனர் – பிரதமர் மோடி பேச்சு
விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உத்திரப்பிரதேசம் கோரக்பூரில் உள்ள சவுரி சவுராவில், சவுரி சவுரா நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.இதன் பின்னர் பிரதமர் மோடி பேசுகையில்,நாட்டின் முன்னேற்றத்திற்கு பின்னால் விவசாயிகள் உள்ளனர்.சவுரி சவுரா போராட்டத்திலும் அவர்கள் முக்கிய பங்கு வகித்தனர். கடந்த ஆறு ஆண்டுகளில், விவசாயிகளை தன்னம்பிக்கை கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, தொற்றுநோய்களின் போது கூட விவசாயத் துறை வளர்ந்துள்ளது.விவசாயிகளின் நலனுக்காக நாங்கள் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என்று பேசியுள்ளார்.