வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘டெல்லி சாலோ’ என்ற பெயரில் டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி நடத்தி வரும் நிலையில் , பயணிகள் சிங்கு ,குருகிராம் எல்லைகளை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகிய 3 சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது.ஆனால் இந்த சட்டங்களுக்கு ஹரியானா ,பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.இதனை திரும்பப்பெற வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘டெல்லி சாலோ’ என்ற பெயரில் விவசாயிகள் டெல்லி நோக்கி குருகிராமில் இருந்து டெல்லிக்கு செல்லும் சாலையில் பேரணியில் நேற்று ஈடுபட்டனர்.அந்த சமயத்தில் ஹரியானா எல்லையில் தடுப்புகளை அமைத்து காவல்துறை விவசாயிகளைத் தடுத்தனர். கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் காவல்துறையினர் கலைத்தனர்.ஆகவே ,அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதன் பின்பு நேற்று பேரணியில் கலந்துகொண்ட விவசாயிகள் பானிபட் சுங்கச்சாவடி அருகே இரவு உறங்கினார்கள்.இதனையடுத்து காலை மீண்டும் 2 வது நாளாக தங்களது பேரணியை தொடங்கினார்கள்.இதன் விளைவாக டெல்லி மற்றும் ஹரியாணாவிற்கு இடையேயான சிங்கு எல்லையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பட்டுள்ளது.மேலும் பேரணியாக வரும் விவசாயிகளை தடுத்து நிறுத்தும் நோக்கில் தடுப்பு வேலிகளை அமைத்துள்ளனர்.ஆனாலும் விவசாயிகள் தடுப்பு வேலிகளை உடைத்து பேரணியாக வர முயன்றனர்.இதனால் போலீசார் தண்ணீர் பாய்ச்சியும், கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும் கலைத்தனர்.விவசாயிகள் பேரணி காரணமாக மற்ற மாநிலங்களில் இருந்து டெல்லி செல்லும் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் பயணிகள் சிங்கு ,குருகிராம் எல்லைகளை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக…
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…