பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த விவசாயிகள் சிங்கு எல்லை, காசிப்பூர் எல்லை மற்றும் திக்ரி எல்லை ஆகியவை பகுதிகளில் ஒரு மாதத்திற்கும் மேலாக நிலவும் குளிரின் மத்தியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், தங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் விவசாயிகள் வெங்காயத்தை பயிர் செய்து வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஆர்ப்பாட்டங்களின் போது நாங்கள் ஒரு மாதமாக சும்மா உட்கார்ந்திருப்பதால், வெங்காயத்தை நம் அன்றாட சமையலுக்குப் பயன்படுத்தலாம் என்பதால் அதைப் பற்றி யோசித்தோம். இதனால், எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மண்ணை தோண்டி வெங்காய பயிர்களை விதைத்து வருகின்றோம் என்று ஒரு விவசாயி கூறினார்.
மூன்று சட்டங்களையும் ரத்து செய்யவேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். இதுவரை மத்திய அரசுக்கும், விவசாயிகள் சங்கங்கள் இடையே ஐந்து சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்தன, ஆனால், இந்த பேச்சுவார்த்தையின் போது எந்தவிதமான உடன்படும் எட்டப்படவில்லை. இந்நிலையில், டிசம்பர் 30 ம் தேதி அன்று ஒரு டிராக்டர் அணிவகுப்பு மூலம் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. போட்டியில் விளையாட வீரர்கள் தயாராகி…
வாஷிங்டன் : நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து Crew-10 மிஷனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர்.கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க…
சென்னை : நேற்று (மார்ச் 14) 2025-26 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார்.…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…