விவசாயிகளுக்கும் , அரசாங்கத்திற்கும் இடையிலான கூட்டம் முடிந்தது. மற்றொரு பேச்சுவார்த்தை டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது.
மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா குஜராத் மற்றும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றன. இவர்களின் போராட்டம் தொடர்ந்து 6-வது நாளாக இன்று நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று விவசாயிகள் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவர மத்திய வேளாண் துறை அமைச்சகம் சார்பில் உருவாக்கப்பட்ட கூட்டத்தில் முக்கிய மத்திய அமைச்சர்கள் மற்றும் விவசாயிகள் தலைவர்களுக்கும் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் 32 விவசாய சங்கத்தை சார்ந்த தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தின் போது மத்திய அரசு சில உத்தரவாதங்கள் அளித்தது.
அதில், விவசாயிகள் கோரிக்கையை பரிசீலனை செய்ய ஒரு குழு அமைக்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், விவசாயிகள் குழு அமைத்து தங்கள் கோரிக்கையை விசாரிக்கும் அந்த விஷயத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தெரிவித்தனர். இதையடுத்து 3 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த கூட்டம் எந்த ஒரு இறுதி முடிவும் எட்டப்படாமல் முடிவடைந்தது.
கூட்டம் குறித்து பேசிய மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் , கூட்டம் நன்றாக இருந்தது, மற்றொரு சுற்று பேச்சுவார்த்தை டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெறும் என்று முடிவு செய்துள்ளோம். ஒரு சிறிய குழு அமைக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம், ஆனால் அனைவருடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று விவசாயிகள் தலைவர்கள் கூறினார். எங்களுக்கு அதில் எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவித்தார்.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில்…
கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று…
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அமெரிக்காவில் இறக்குமதியாகும் அயல்நாட்டு பொருட்கள் மீது அதிகப்படியான புதிய பரஸ்பர…
மதுரை : இன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…