மும்பையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 35,000 விவசாயிகள் 200 கி.மீ பேரணி…!!

Default Image

அகில இந்தியவிவசாயிகள் சங்கத்தின்(AIKS) தலைமையில் கடன் தள்ளுபடி,விலை நிர்ணயம் மற்றும் வனச்சட்டம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் மற்றும் ஆதிவாசிகள் மும்பையை நெருங்கி விட்டனர். இன்று இரவில் மத்திய மும்பையில் உள்ள சோமையா மைதானத்தில் சங்கமம் ஆகின்றனர். நாளையதினம் சட்டமன்ற(விதான் சபா)முற்றுகையில் ஈடுபடுவர்.

செவ்வாய் கிழமை நாசிக்கில் இருந்து துவங்கிய இந்த நீண்ட பயணம் ஒவ்வொரு 30 கி.மீ. பயணித்தது. சுட்டெரிக்கும் வெயில். வரும் வழியில் பொதுமக்கள் பல உதவிகளையும், உபசரிப்பையும் நல்கினர்.சிவசேனா, மகாராஷ்டிரா நிர்மாண் சேனா,சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான கட்சிகள் நேரடியாக ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

வரும் வழிநெடுக விவசாயிகள் மற்றும் ஆதிவாசிகள் நெடும்பயணத்தில் சங்கமமாகி வருகின்றனர். முப்பை புறநகரை நெருங்கி விட்டது. இப்போது 35,000 பேர் வரை அணிவகுத்து வருவதாக செய்தி நிறுவனங்களே கூறுகின்றன.இன்னும் ஏராளமான மக்கள் நாளையதின முற்றுகையில் பங்கேற்க கிராமங்களில் இருந்து கிளம்பி வந்து கொண்டிருப்பதாக கூறுகிறார் இந்த இயக்கத்தின் தலைவர் பேராசிரியர். அஜீத் நவாலே.

பேரணியின் லிங்க்-https://www.facebook.com/karthik.linganathan.3/videos/1666454040110495/

 

பேரணியாக செல்லும் கால்கள்:

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்