‘விவசாயிகள் தற்கொலை புதிதல்ல’ – மகாராஷ்டிரா அமைச்சர் சர்ச்சை பேச்சு..!
விவசாயி தற்கொலை விவகாரம் புதிதல்ல என மகாராஷ்டிரா விவசாய அமைச்சர் அப்துல் சத்தார் பேட்டி.
விவசாயிகள் தற்கொலை புதிதல்ல
மகாராஷ்டிரா விவசாய அமைச்சர் அப்துல் சத்தாரிடம் செய்தியாளர்கள் சில்லோடில் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டது குறித்து கருத்து கேட்டனர். அதற்கு சத்தார் ஒரு சர்ச்சையான பதிலை அளித்துள்ளார்.
விவசாயிகள் தற்கொலைகள் எங்கும் நடக்கக்கூடாது
அவர் கூறுகையில், விவசாயி தற்கொலை விவகாரம் புதிதல்ல. இது போன்ற சம்பவங்கள் பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன. எனது தொகுதி உட்பட மகாராஷ்டிராவில் விவசாயிகள் தற்கொலைகள் எங்கும் நடக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
மார்ச் 3 முதல் 12 வரை சில்லோடில் குறைந்தது இரண்டு விவசாயிகள் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொண்டதாக காவல்துறை கூறியது. இருப்பினும், அதே காலகட்டத்தில் மராத்வாடா பகுதியில் உள்ள ஔரங்காபாத் மாவட்டத்தில் குறைந்தபட்சம் ஆறு விவசாயிகள் கடன் சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக ஆதாரங்கள் கூறுகின்றன. இதுகுறித்து ஆய்வு செய்ய வேளாண் ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், பயிர் சேத நிவாரணத்தில் எந்த விவசாயியும் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்வதாகவும், இறுதி அறிக்கைகள் இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை, எந்த சேதமும் இறுதி அறிக்கையில் இணைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.