நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி 3 வேளாண் மசோதாக்களை மத்திய அரசு அண்மையில் நிறைவேற்றியது. இம்மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதில் இருந்தே பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் தொடர் போராட்டங்களை ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இரு அவையிலும் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் விவசாயிகள் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதில் குறிப்பாக , பஞ்சாப் மாநிலத்தில் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி தலைமையில் 30க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து ரெயில் மறியல் போராட்டத்தை நடத்தி வருகின்றன.
கடந்த வியாழக்கிழமை முதல் 3 நாள் ரெயில் மறியல் போராட்டத்துக்கு மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி அழைப்பு விடுத்தித்தது. அதன்படி பஞ்சாப்பின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தண்டவாளங்களில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த ரெயில் மறியல் போராட்டம் நேற்று 3வது நாளாக தொடர்ந்தது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் ரெயில் தண்டவாளங்களில் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராகவும் வேளாண் மசோதாக்களுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர். அமிர்தசரஸ் நகரில் விவசாயிகள் தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் மேல் ஆடையின்றி அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் நேற்றுடன் முடிவடைய இருந்த இந்த ரெயில் மறியல் போராட்டத்தை மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பதாக மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி தற்போது அறிவித்துள்ளது. விவசாயிகளின் இந்த ரெயில் மறியல் போராட்டத்தால் மாநிலம் முழுவதும் ரெயில் சேவைகள் பெரும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…