விவசாயி உயிரிழப்பு.. இரண்டு நாட்களுக்கு பேரணி ஒத்திவைப்பு..!
அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க சட்டம் இயற்ற வேண்டும், விவசாயக் கடன் தள்ளுபடி, சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முடிவடைந்த 4-ம் கட்ட பேச்சுவார்த்தையின் போது, மூன்று மத்திய அமைச்சர்கள் கொண்ட குழு, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு சோளம் மற்றும் பருத்தி ஆகிய ஐந்து பயிர்களை விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் ஐந்து ஆண்டுகளுக்கு அரசு கொள்முதல் செய்யும் என தெரிவித்தனர். இதற்கு மறுப்பு தெரிவித்து மீண்டும் போராட்டத்தை விவசாயிகள் நேற்று தொடங்கினர்.
நேற்று பிற்பகல் மத்திய விவசாய அமைச்சர் அர்ஜுன் முண்டா 5-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாக அறிவித்தார். மேலும், போராட்டக்காரர்கள் அமைதி காக்கவும், பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவும் வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில், பஞ்சாப்-ஹரியானா எல்லையில் உள்ள இரண்டு போராட்டத் தளங்களில் ஒன்றான கானௌரியில் நேற்று நடந்த மோதலில் ஒரு விவசாயி உயிரிழந்தார்.
மேலும் 12 போலீஸார் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து, விவசாயிகள் தலைவர்கள் ‘டெல்லி சலோ’ பேரணி இரண்டு நாட்களுக்கு ஒத்திவைத்தனர். விவசாயிகளின் தலைவர் சர்வான் சிங் பாந்தர், ஷம்புவில் செய்தியாளர்களிடம் பேசியபோது” கனௌரி மற்றும் ஷம்பு எல்லையில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காவல்துறை நடத்திய அட்டூழியங்களை நாங்கள் கண்டிக்கிறோம்.
கரும்பு கொள்முதல் விலையை 8% உயர்த்திய மத்திய அரசு ..!
உயிரிழந்தவர் பஞ்சாபின் பதிண்டா மாவட்டத்தில் உள்ள பலோக் கிராமத்தைச் சேர்ந்த சுப்கரன் சிங் (21) என தெரியவந்துள்ளது. இதற்கிடையில் ஹரியானா காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், விவசாயிகள் நடத்திய மோதலில் சுமார் 12 போலீசார் கற்களால் தாக்கப்பட்டதில் காயமடைந்தனர் என தெரிவித்தார். இந்த சம்பவத்திற்கு பதிலளித்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், போராட்டக்காரர்களின் குடும்பத்திற்கு பஞ்சாப் அரசு நிதியுதவி அளிக்கும் என்று உறுதியளித்தார். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு எப்ஐஆர் பதிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
“