#பாஜக பஞ்சத்திற்கு வழிகாட்டுகிறது- மசோதா குறித்து விளாசல்
கொரோனா பேரிடரை கையாள தெரியாத மத்திய அரசு வேளாண்மை மசோதா மூலமாக நாட்டில் பஞ்சத்தினை ஏற்படுத்த முயலுவதாக மேற்கு வங்க முதல்வர் மசோதா குறித்து விமர்சித்துள்ளார்.
மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வேளாண்மை மசோதாவிற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மசோதா குறித்து பிரதமர் விளக்கமளித்தா.ஆனாலும் மசோதாவிற்கு விவசாயிகள்,அரசியல் கட்சிகள் என பலரும் எதிர்த்து வருகிறனர்.
இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மசோதா குறித்து கூறியதாவது:
அத்தியவாசிய பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் எனவே வேளாண் பெருமக்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை கிடைக்காததால் வேளாண் மசோதாக்கள் உணவு நெருக்கடிக்கு வழிவகுக்கும் என்றும் எனவே அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றினைந்து போராடவேண்டும் என்று மம்தா பேனர்ஜி தெரிவித்துள்ளார்.