குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு நாடாளுமன்றத்தின் சார்பில் இன்று பிரியாவிடை…!

Default Image

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு நாடாளுமன்றத்தின் சார்பில் இன்று பிரியாவிடை நிகழ்வு நடைபெறவுள்ளது. 

இந்தியாவின் 14வது குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், 15வது குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடந்த (ஜூலை) 18ஆம் தேதி நடைபெற்றது.

இந்த நிலையில், குடியரசு தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவின் 15வது  குடியரசு தலைவர் பதவிக்கு   பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட திரௌபதி முர்மு வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஜூலை 25-ஆம் 15-வது குடியரசு தலைவராக பதவியேற்க உள்ளார்.

தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு நாடாளுமன்றத்தின் சார்பில் இன்று பிரியாவிடை நிகழ்வு நடைபெறவுள்ளது. பிரியாவிடை நிகழ்வில் பிரதமர் மோடி, இரு அவைகளின் சபாநாயகர்கள், எம்.பி.க்கள், மத்திய அமைச்சர்கள், உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்