விமான பாதுகாப்பு பணிகளுக்கான கட்டணம் உயர்வு – விமான போக்குவரத்துக்கு அமைச்சகம் முடிவு!

Default Image

விமான நிலையத்துக்கான பாதுகாப்பு கட்டணத்தை பயணிகளிடமிருந்து உயர்த்தி வசூலிக்க விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில மாதங்களாக இயங்காமல் இருந்த விமானங்கள் தற்போது சில கட்டுப்பாடுகளுடன் இயங்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களை பாதுகாக்கும் பணிகளுக்காக விமான சேவை நிறுவனங்கள் பயணிகளிடமிருந்து டிக்கெட் கட்டணத்துடன் சேர்த்து பாதுகாப்புக்கான கட்டணத்தையும் வசூலித்து அதை மத்திய அரசுக்கு செலுத்தி வருகின்றது.

இந்நிலையில் உள்நாட்டு விமான போக்குவரத்தில் விமான நிலைய பாதுகாப்பு கட்டணம் ஏற்கனவே இருந்த 150 ரூபாய் உடன் பத்து ரூபாய் அதிகரிக்கப்பட்டு 160 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விமான போக்குவரத்தை பொருத்தவரை 243 ரூபாயாக இருந்த பாதுகாப்பு கட்டணம் முன் 366 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வருகின்ற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக விமானப் போக்குவரத்துத் துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்