16 வயதிலே டிக் டாக், இன்ஸ்டாகிராமில் பிரபலம் ! தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி

டிக் டாக் மூலம் பிரபலமான ஷியா வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.
டெல்லியில் உள்ள ப்ரீத்தி விஹாரில் என்ற இடத்தில வசித்து வந்தவர் சியா க்கக்கர் 16 வயதான டிக்டாக் மூலம் இவர் தனது நடிப்பு திறமையை வெளியிடுவார. மேலும் டிக்டாக் ஷியா என்றால் மக்களுக்கு மத்தியில் அவ்வளவு பிரபலம் என்று கூறலாம், விதவிதமாக நடித்து தனது நடிப்பு திறமையை காட்டி வீடியோக்களை பதிவிட்டுள்ளார்.
மேலும் இவரது அட்டகாசமான நடனம் மற்றும் நடிப்பிற்கு சமூகவலைத்தளங்களிள் அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள், இவருக்கு டிக்டாக்கில் 11 லட்சம் ஃபாலோவர்ஸை வைத்துள்ளார். இன்ஸ்டா கிராமில் மட்டும் 2 லட்சதுக்கு மேல் இவருக்கு ஃபாலோயர்ஸ் உள்ளனர். இந்நிலையில் சியா க்கக்கர் 4 நாட்கள் வீட்டில் அப்செட்டாக இருந்துள்ளார், கடும் மனஉளைச்சளில் இருந்த ஷியா திடீரென வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார், இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சியா க்கக்கர் தற்கொலை செய்துகொள்ளும் முன்பு நேற்று முன்தினம் ஒரு விளம்பர படத்தின் ஷுட்டிங்கிலும் கலந்து கொண்டுள்ளார் அங்குள்ள அனைவரிடமும் கலகலப்பாக பேசியுள்ளார்,மேலும் அதனால் துறை ரீதியாக அவருக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்று தெரியவந்துள்ளது.
மேலும் சியா க்கக்கர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிரித்தபடி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார், அதற்கு பிறகு தான் ஷியா தற்கொலை செய்துள்ளார், இதன்தொடர்பாக காவல்துறையினர் ஷியா நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்,