இன்ஸ்டாகிராம் புரொஃபைலை நீக்கிய ஆர்யன் கான்…குழப்பத்தில் ரசிகர்கள்..!

சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு ஆர்யன் கான் தனது இன்ஸ்டாகிராம் சுயவிவரப் படத்தை நீக்கியதால் அவரது ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் ஆர்தர் ரோடு சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு தனது இன்ஸ்டாகிராம் சுயவிவரப் படத்தை நீக்கிவிட்டார். 23 வயதான அவர் இன்ஸ்டாகிராமில் 1.9 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டிருந்தார்.எனினும்,ஆர்யன் இன்ஸ்டாகிராமை அதிகம் பயன்படுத்தும் நபர் அல்ல.ஏனெனில், 2013 ஆம் ஆண்டு முதல் இன்ஸ்டாகிராமில் சேர்ந்ததிலிருந்து 24 போஸ்டுகள் மட்டுமே பகிர்ந்துள்ளார்.இந்த நிலையில்,சமூக ஊடக தளத்திலிருந்து தனது புகைப்படத்தை நீக்கியுள்ளார்.இதனால்,அவரது ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
மும்பை சொகுசுக் கப்பலில் போதைப்பொருள் இருந்தது தொடர்பான வழக்கில் ஆர்யன் கானை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி) அக்டோபர் 3 ஆம் தேதி கைது செய்தனர். ஆர்யனின் நண்பர் அர்பாஸ் மெர்ச்சன்ட் மற்றும் இளம் மாடல் முன்முன் தமேச்சா உள்ளிட்ட சிலரையும் என்சிபி கைது செய்தது.இதனையடுத்து,ஆர்தர் ரோடு சிறையில் ஒரு மாத காலம் சிறைவாசம் அனுபவித்துவிட்டு கடந்த சனிக்கிழமை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டு வீடு திரும்பிய ஆர்யன் கான், வீட்டுக்கு வெளியே பட்டாசுகளை வெடித்து,ரசிகர்களால் வரவேற்கப்பட்டார்.
எனினும்,சட்ட விரோத நடவடிக்கைகளில் இனி ஈடுபடாமல் இருப்பது,ஒரு லட்சம் ரூபாய் பிணைத் தொகை வழங்குவது,சாட்சியங்களை கலைக்காமல் இருப்பது,குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளாமல் இருப்பது,பாஸ்போர்ட் ஆவணத்தை சிறப்பு நீதிமன்றத்திடம் சமர்பிப்பது,வழக்கு தொடர்பாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் கருத்து வெளியிடாமல் இருப்பது,மும்பை நகரத்தை விட்டு வெளியே செல்ல முயன்றால் விசாரணை அதிகாரியிடம் தெரிவித்துவிட்டுச் செல்வது என பல்வேறு நிபந்தனைகளின்கீழ் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து,ஆர்யன் வெளியான பிறகு கரண் ஜோஹர், ஷனாயா கபூர், ஹன்சல் மேத்தா உள்ளிட்டோர் சமூக ஊடகங்களில் அன்பை பகிர்ந்தனர். அதே நேரத்தில் அவரது சகோதரி சுஹானா கான் இன்ஸ்டாகிராமில் தம்பியுடனான தனது அன்பை வெளிப்படுத்த அவர்களின் குழந்தைப் பருவத்திலிருந்து ஒரு படத்தை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
மூன்றே நாட்களில் 50 கோடி…பட்ஜெட்டை தூக்கி அசத்திய டிராகன்!
February 24, 2025
இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டிய சூழல் வந்துவிட்டது! நாதகவில் இருந்து விலகிய காளியம்மாள்!
February 24, 2025
தமிழகத்தில் எங்கெல்லாம் எப்போது மழைக்கு வாய்ப்பு? வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்…
February 24, 2025
NZvsBAN : டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச முடிவு!
February 24, 2025
ஈஷா யோகாவின் சிவராத்திரி விழாவுக்கு தடையில்லை! உயர்நீதிமன்றம் உத்தரவு!
February 24, 2025