பத்மவிபூஷண் விருது பெற்ற 99 வயதுடைய மகாராஷ்டிராவின் புகழ்பெற்ற எழுத்தாளர் பாபாசாகேப் புரந்தரே காலமானார்.
மகாராஷ்டிர மாநிலத்தின் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியரும், எழுத்தாளருமானவர் தான் பாபாசாகேப் புரந்தரே. இவர் மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி குறித்த தனது படைப்புகள் மூலமாக மிகவும் புகழ்பெற்றவர். மேலும் 2019 ஆம் ஆண்டு இவருக்கு இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய குடிமகன் விருதான பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டிருந்த தொண்ணூற்று ஒன்பது வயதுடைய புகழ் பெற்ற எழுத்தாளர் புரந்தரே அவர்கள் புனேவில் உள்ள தீனாநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.
இருப்பினும் வயது முதிர்வு காரணத்தால் மருத்துவ சிகிச்சையை அவரது உடல் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் வெண்டிலேட்டர் உதவியுடன் இருந்த புரந்தரேவின் உடல்நிலை மிகவும் மோசமாகியுள்ளது. இதனை அடுத்து இன்று அதிகாலை 5 மணியளவில் அவர் உயிர் இழந்தார். பாபாசாகேப் புரந்தரே அவர்களின் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…
டெல்லி : ஐபிஎல் 2025 தொடரில், அம்பயர்கள் வீரர்கள் களத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய பேட்டுகளை களத்தில் பரிசோதிக்கும் புதிய…
சென்னை : தமிழக பாஜகவின் 13-வது தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு…
சென்னை : தமிழக அரசின் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மெனுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 245% வரை வரி விதிக்கப்படும் என…