சுவாச கோளாறு பிரபல பாடகி லதா மங்கேஸ்கர் மருத்துவமனையில் அனுமதி..!

பாடகி லதா மங்கேஸ்கர் தமிழ் ,இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்பட பாடல்களை பாடியுள்ளார்.90 வயதான இவர் கடந்த மாதம் 28-ம் தேதி தனது 90-வது பிறந்தநாளை கொண்டாடினர்.
உடல்நிலை குறைவால் இவருக்கு தனது வீட்டிலே சிசிக்சை கொடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை 01.30 மணிக்கு இவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது. இதனால் மும்பையில் உள்ள பிரீச் கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் , தீவிர சிகிக்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.