பிரபல சர்வதேச கபடி வீரர் சுட்டுக் கொலை;தலை மற்றும் மார்புப் பகுதியில் பாய்ந்த சுமார் 20 குண்டுகள்!
பஞ்சாப் மாநிலம்,ஜலந்தரில் உள்ள மல்லியன் குர்த் கிராமத்தில் நேற்று கபடி போட்டியின் போது பிரபல சர்வதேச கபடி வீரர் சந்தீப் சிங் நங்கலை குறிவைத்து அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பக்கியால் சுடத் தொடங்கினர்,இதல் சுமார் 20 குண்டுகள் சந்தீப்பின் தலை மற்றும் மார்புப் பகுதியில் பாய்ந்தத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.அவரை சிலர் துப்பாக்கியால் சுடுவது வீடியோவில் பதிவாகியுள்ளது.அதில் அவரை மர்மநபர்கள் சுடும்போது மக்கள் ஓடுவதைக் காண முடிந்தது.ஷாகோட்டின் மல்லியன் கலான் கிராமத்தில் சந்தீப் நங்கல் கபடி போட்டி விளையாடிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்தது.
சந்தீப்,கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பஞ்சாப் மட்டுமல்லாமல் அமெரிக்கா,கனடா,இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கபடி போட்டிகளில் பங்கேற்று சிறப்பாக விளையாடி வருகிறார்.
மேலும்,அவர் பெரிய லீக் கபடி கூட்டமைப்பை கவனித்து வருவதாகவும், அவருக்கும் கூட்டமைப்பிற்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்த சம்பவம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.எனினும்,இது குறித்த முழு தகவல் காவல்துறையினரின் விசாரணைக்குப் பின்னரே தெரிய வரும் என கூறப்படுகிறது.
Jalandhar’s #Mallian Village, More than two dozen goons opened fire on Kabaddi player Sandeep Singh Nangal. pic.twitter.com/e5Bb4ICnV2
— Nikhil Choudhary (@NikhilCh_) March 14, 2022