Categories: இந்தியா

மக்களவை தேர்தல் : பாஜக சார்பில் நடிகை கங்கனா ரனாவத் போட்டி!

Published by
பால முருகன்

Kangana Ranaut : நாடாளுமன்ற தேர்தலில் பிரபல நடிகை கங்கனா ரனாவத்  பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் மாதம் 1ஆம் தேதி வரையில் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில், பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான  கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

அதைப்போல, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கொண்ட பட்டியலையையும் கட்சிகள் அறிவித்து வருகிறது. அந்த வகையில், ஏற்கனவே, பாஜக 4 கட்டம் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து இருந்த நிலையில், நேற்று  பாஜக தலைமை5 வது கட்டமாக 111 பாஜக வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டது.

அந்த பட்டியலில் தான் பிரபல நடிகையான கங்கனா ரனாவத் பெயர் இடம்பெற்று உள்ளது. அதன்படி, இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் கங்கனா ரனாவத் பாஜக சார்பில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப்போல,  கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக மாநில தலைவர் கே.சுரேந்திரன் என்பவர் போட்டியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், இமாச்சலப் பிரதேசத்தில் 7-ஆம் கட்டமாக  ஜூன் 1-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

10 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

11 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

12 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

12 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

12 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

13 hours ago