கொலையாளியாகவே இருந்தாலும் மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படலாம் – உயர்நீதிமன்றம் கருத்து!

கணவனை கொன்ற கொலையாளியாக இருந்தாலும் கூட மனைவி குடும்ப ஓய்வூதியத்தினை பெறுவதற்கு தகுதியானவர் தான் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2008 ஆம் ஆண்டிலுள்ள ஒரு கொலை வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் கணவனை கொலை செய்த குற்றவாளியாக இருந்தாலும் கூட அந்த பெண் குடும்ப ஓய்வூதியத்தை பெறுவதற்கு தகுதியானவர் தான் என பரபரப்பான கருத்துக்களை கூறியுள்ளது. குடும்ப ஓய்வூதியம் என்பது அரசு ஊழியர் ஒருவர் இறந்துவிட்டால் வழங்கப்படக்கூடிய ஒரு நிதி உதவி.
இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் உள்ள தர்செம் சிங் என்பவர் 2008 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட நிலையில், அதற்கான குற்றவாளி அவரது மனைவி தான் என 2011 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு வரை குடும்ப ஓய்வூதியத்தை பெற்று வந்த கொலை செய்யப்பட்ட தர்செம் சிங்கின் மனைவி பால்ஜீத் கவுருக்கு, திடீரென ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஹரியானா அரசாங்கத்தின் மீது போடப்பட்ட வழக்கு குறித்த விசாரணையில், குற்றவாளியாக இருந்தாலும் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படலாம் என தற்பொழுது உயர்நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டது. இதனை அடுத்து கொடுக்கப்படாமல் நிலுவையில் இருந்த தொகையையும், இனி உள்ள ஓய்வூதியத்தையும் முறையாக வழங்க வேண்டும் என இது சம்மந்தப்பட்ட துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
சின்ன டீம் கூடதான் விக்கெட் எடுப்பார் பெரிய டீம் கூட முடியாது! ரஷித் கானை விமர்சித்த இந்திய முன்னாள் வீரர்!
February 27, 2025
சினிமாவில் நடிச்சி சொத்து சேத்து வச்சிட்டு அரசியல் வராங்க! சிக தலைவர் திருமாவளவன் பேச்சு!
February 27, 2025
காலத்தால் அழியாத காதல் …15 ஆண்டுகளை கடந்த VTV…நடிகர் சிம்பு நெகிழ்ச்சி!
February 27, 2025