கணவனுக்கு மீறி தனது அண்டை வீட்டுக்காரர் தையல்காரர் உடன் கள்ள தொடர்பில் இருந்த ஆசிரியை ஒருவர் லாட்ஜில் இருந்தபொழுது கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரில் வசித்து வரக்கூடிய சஞ்சீவி பாட்டில் கமலா எனும் அங்கன்வாடி ஆசிரியராக பணி புரியக்கூடிய பெண்மணி ஒருவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில், இவர் தனது கணவரை விடுத்து அண்டை வீட்டுக்காரர் தையல்காரர் ஒருவர் ஆகிய திலீப்குமார் என்பவருடன் கள்ளத் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதனை அறிந்த கணவர் பலமுறை இதுகுறித்து அவரது மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் இவர்கள் கடந்த இரண்டு வருடங்களாக தங்களது கள்ளத்தொடர்பில் நீடித்துக் கொண்டே தான் இருந்துள்ளனர். இந்நிலையில் அங்கன்வாடி சென்றுவிட்டு மாலை ஐந்தரை மணிக்கு எப்போதும் வீடு திரும்பக் கூடிய கமலா கடந்த 24ஆம் தேதி வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது கணவர் சித்பூரா காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல்துறையினர் கமலாவை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு மூன்று நாட்கள் ஆகியும் கமலா கிடைக்கவில்லை.
இந்நிலையில், நவம்பர் 27ஆம் தேதியன்று அங்குள்ள லாட்ஜ் அறை ஒன்று பூட்டப்பட்டு இருப்பதாகவும் அதில் இருந்து துர்நாற்றம் வீசுவதையும் அறிந்து காவல்துறையினருக்கு சந்தேகத்தின் பேரில் தகவல் அளித்துள்ளனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கதவை உடைத்து பார்த்தபோது பெண் ஒருவரின் சடலம் மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி அழுகிய நிலையில் இருந்ததையும் கண்டறிந்துள்ளனர். அதன்பின் உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்த போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன் அந்தப் பெண்ணின் சடலம் யார் என்பது குறித்து சிசிடிவி காட்சிகள் மூலமாக அறியத் துவங்கியுள்ளனர். அப்பொழுது கமலாவின் கணவர் கொடுத்த புகாரில் நிலுவையில் இருந்ததால் அவரும் அவ்விடத்திற்கு வரவழைக்கப்பட்ட சடலத்தை பார்த்து தனது மனைவி தன் அடையாளம் கூறியுள்ளார்.
இதனை அடுத்து சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் என்ன நடந்தது என தேடி வந்துள்ளனர். அப்பொழுது தான் தெரியவந்துள்ளது நவம்பர் 24ஆம் தேதி காலை கமலா அங்கன்வாடி செல்லாமல் 11 மணியளவில் திலீப்புடன் லாட்ஜில் ரூம் போட வந்து உள்ளார். ஆனால் மதியம் இரண்டரை மணிக்கு கமலா ரூமில் இருந்து வெளியே வரவில்லை ஆனால் திலீப் மட்டும் லாட்ஜ் ரூமில் இருந்து வெளியேறுவதை வீடியோ காட்சிகள் மூலமாக போலீசார் கண்டறிந்துள்ளனர். அங்கே தான் கொலை செய்து தூக்கில் மாட்டிவிட்டு இருக்க வேண்டும் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். தற்போது திலீப்பை கைது செய்ய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கொலை குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…