வீழ்ச்சியடைந்த தக்காளி விலை; வீதிகளில் கொட்டும் விவசாயிகள் – வைரல் வீடியோ உள்ளே…!
மகாராஷ்டிரா மாநிலத்தில் தக்காளியின் விலை 2 ரூபாயாக குறைந்துள்ளதால், விவசாயிகள் தக்காளிகளை வீதிகளில் கொட்டி சென்றுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் எனும் நகரில் காய்கறி விற்பனை செய்யும் மொத்த சந்தையில் தக்காளியின் விலை நேற்று இரண்டு ரூபாய் முதல் மூன்று ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. தக்காளியின் விலை மிக அதிக அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதுடன் பருவகால மழையும் தொடங்கியுள்ளதால் தக்காளிகளை சேகரித்து வைத்து பாதுகாக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே, தக்காளி பயிர் செய்த நாசிக் நகர் விவசாயிகள் அவற்றைக் கூடைகளுடன் சாலைகளில் குவியலாக கொட்டி உள்ளனர். இந்த தக்காளிகளை விற்பனை செய்தாலும் வண்டி வாடகை மற்றும் ஆள் கூலிக்கு கூட இது போதாது என விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். தற்போது இது குறித்த வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
#WATCH Nashik farmers threw crates of tomatoes on the road yesterday after prices crashed to Rs 2-3 per kg in the wholesale market#Maharashtra pic.twitter.com/SBMqgSGfFH
— ANI (@ANI) August 27, 2021