நாளை ட்ரம்ப் வரும் நிலையில் சரிந்து விழுந்த அலங்கார வளைவு..!
- அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நாளை அரசு முறை பயணமாக இந்தியாவிற்கு வருகிறார்.
- அவரை வரவேற்க தற்காலிகமாக அமைக்கப்பட்ட அலங்கார வளைவு ஒன்று காற்றின் வேகம் தாங்க முடியாமல் சரிந்து விழுந்தது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நாளைஅரசு முறை பயணமாக இந்தியாவிற்கு வருகிறார்.ட்ரம்புடன் அவரது மனைவி மெலனியாவும் வருகிறார். 24 , 25 ஆகிய இரு நாட்கள் ட்ரம்ப் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அதிபர் ட்ரம்ப் பார்வையிடும் தாஜ்மஹால், டெல்லி மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களில் துணை ராணுவ படையினர், போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த பயணத்தின் பொது பிரதமர் மோடி , அதிபர் ட்ரம்ப் இடையேயான உயர்மட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் அதிபர் ட்ரம்ப் நாளை வருவதையொட்டி சாலையோரங்களில் வரவேற்பு பேனர்கள் , இரு நாடுகளின் கொடிகள், சுவர்களில் ஓவியங்கள்மற்றும் தற்காலிகமாக அலங்கார வளைவுகள் என பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் அதிபர் ட்ரம்ப் கலந்து கொள்ள உள்ளார்.
#MoteraStadium entry point collapsed with one heavy wind.
That’s what happens when the Vikas is fake, it’s bound to be exposed and shall collapse. ????#NamasteTrump
— Santosh Addagulla (@santoshspeed) February 23, 2020
அந்த மைதானத்துக்குச் செல்லும் வழியில் பல அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளது. அங்கு தற்காலிகமாக அமைக்கப்பட்ட அலங்கார வளைவு ஒன்று காற்றின் வேகம் தாங்க முடியாமல் சரிந்து விழுந்தது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.