இந்திய எல்லைகளை கண்காணிக்க இஸ்ரேலிலிடம் இருந்து பால்கன் விமானங்கள் வாங்க முடிவு.!
இந்திய எல்லைகளை கண்காணிக்க இஸ்ரேலிடம் இருந்து அதிநவீன பால்கன் விமானங்களை வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்திய பாதுகாப்பு படையை பலப்படுத்த மத்திய அரசு ஏற்கனவே ரஃபேல் விமானங்கள், அப்பாச்சி ஹெலிகாப்டர்களை இந்திய ராணுவத்திற்காக மத்திய அரசு வாங்கியுள்ளது. இதனால் இந்திய விமானப் படையின் பலம் அதிகரித்துள்ளது.
தற்போது, வான்வெளி கண்காணிப்பு திறனை அதிகரிக்க இஸ்ரேல் நாட்டில் இருந்து பால்கன் ரக விமானங்களை இந்தியா வாங்க உள்ளது.
இஸ்ரேல் தயாரிப்பில் உருவாகும் பால்கன் விமானமானது சுமார் 7000 கிலோ மீட்டருக்கு அப்பாலுள்ள எதிர் நாட்டு விமானங்களை கூட துல்லியமாக அடையாளம் கண்டு நமக்கு எச்சரிக்கை தரும் திறன் கொண்டது. இந்த விமானமானது மணிக்கு 973 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது.
பால்கான் ரக விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டாலும், இஸ்ரேலிடம் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஆதலால் இஸ்ரேல் நாட்டிலிருந்து இரண்டு விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் வழங்கவுள்ளதாம் .