போலி ஆவணங்கள் மூலம் சிம், வாட்டசாப்.? ஒருவருட சிறை தண்டனை உறுதி.! மத்திய அரசு அதிரடி.!
போலி ஆவணங்கள் வைத்து சிம் வாங்கினாலோ, வாட்டசாப், டெலிகிராம் போன்ற ஆப்களை பயன்படுத்தினாலோ 50 ஆயிரம் அபராதம் எனவும், அதனை கட்ட தவறினால் 1 வருடம் சிறை தண்டனை எனவும் மத்திய அரசு புதிய மசோதாவில் குறிப்பிட்டுள்ளது.
மத்திய அரசு புதியதாக இந்திய தொலைத்தொடர்பு 2022 மசோதாவை கொண்டுவந்துள்ளது. இந்த மசோதாவில் உள்ள விதிகள் தற்போது வெளியாகியுள்ளது.
அதில், போலி ஆவணங்கள் வைத்து சிம் கார்டு வாங்குவது சட்டப்படி குற்றம் எனவும், அப்படி போலி ஆவணங்கள் வைத்து வாட்சாப், டெலிகிராம், சிக்னல் போன்ற செயலிகளை பயன்படுத்தினால் அது குற்றம் எனவும்,
அதற்கு அபராதமாக, 50 ஆயிரம் விதிக்கப்படும் எனவும், அபராதம் கட்ட தவறினால் 1 வருட சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.