போலி பாஸ்போர்ட் மற்றும் விசா மோசடி முறியடிக்கப்பட்டது!!
போலி பாஸ்போர்ட் மற்றும் விசா மோசடியை டெல்லி போலீசார் முறியடித்துள்ளனர்.
வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகவும், பாஸ்போர்ட், விசா போன்ற பயண ஆவணங்களை ஏற்பாடு செய்து தருவதாகவும் கூறி மக்களை ஏமாற்றி வந்த போலி விசா மோசடியை டெல்லி போலீசார் முறியடித்தனர்.
இந்த மோசடியில் ஈடுபட்ட மூவரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பல்வேறு நாடுகளின் 19 போலி பாஸ்போர்ட்கள், 26 போலி விசாக்கள் மற்றும் 165க்கும் மேற்பட்ட குடியேற்ற முத்திரைகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.