ஆளும் மத்திய அமைச்சரவையின் பதவிககாலம் வரும் மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதனால் மக்களவை தேர்தல் பணிகளை அரசியல் கட்சியினர் மட்டுமின்றி நிர்வாக காரணங்களுக்காக தேர்தல் ஆணையமும் ஆரம்பித்து தேர்தல் வேலைகளை முடிக்கிவிட்டுள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோடி மீண்டும் பிரதமரானால் தேர்தலே இருக்காது… இதுவே கடைசி வாய்ப்பு – காங்கிரஸ்
பிப்ரவரி மாத இறுதியில் தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி குறித்து சில போலி செய்திகளை தவிர்க்குமாறு இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து வருகிறது . முன்னதாக, ஏப்ரல் 16ஆம் தேதியில் டெல்லியில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என கூறப்பட்டு வந்த நிலையில், அது தேர்தல் அதிகாரிகளுக்கு பணி நிமித்தம் தொடர்பாக கொடுக்கப்பட்ட உத்தேச தேர்தல் தேதி என டெல்லி தேர்தல் ஆணையம் முன்னதாக விளக்கம் அளித்து இருந்தது.
தற்போது அதே போல, வாட்ஸாப்பில், மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 16, 2024 இல் தொடங்குகிறது என்றும், அதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 16 தேதி வரையில் நடைபெறும் என்றும், பிப்ரவரி 16 முதல் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வருகிறது என்றும் செய்தி ஒன்று பரவியது
இந்த தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் முற்றிலுமாக மறுத்துள்ளது. இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிடுகையில், மக்களவை தேர்தல் தேதி அட்டவணை குறித்து வாட்ஸ்அப்பில் ஒரு போலி செய்தி பகிரப்பட்டு வருகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தால் இதுவரை அதிகாரப்பூர்வ தேதிகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. தேர்தல் அட்டவணையை செய்தியாளர் சந்திப்பு மூலம் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் என பதிவிட்டுள்ளது.
சென்னை : தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக உள்ள நயன்தரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 2022ஆம்…
நியூ யார்க் : குல்தீப் குமார் எனும் 35 வயது மதிக்கத்தக்க நபர் அமெரிக்காவில் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த…
டெல்லி : அடுத்த மாதம் (பிப்ரவரி) தலைநகர் டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பரப்புரை வேலைகளை…
கர்நாடகா: சினாவில் பரவி வரும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சளி, இருமல், தொண்டை எரிச்சல்,…
சென்னை : சீனாவில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாதிக்கும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.…
சென்னை: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் "குட் பேட் அக்லி" திரைப்படம் ஏப்ரல் 10…