கற்பழிப்பு குற்றவாளிக்கு போலிச்சான்றிதழ் வழங்கிய விவகாரத்தில் மருத்துவர் கஜேந்தர் குமார் நய்யார் என்கிற மருத்துவரை டெல்லி மருத்துவர்கள் கவுன்சில் இவரை நவம்பர் மாதம் வரையில் மருத்துவத்துறையில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளது.
டெல்லியில் உள்ள பங்கா சாலையில் வசிக்கும் முகேஷ் சங்வான் (38) என்பவர் கடந்த 2015ஆம் ஆண்டு கற்பழிப்பு வழக்கில் டெல்லி போலீசால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். இவருக்கு ஜாமீன் கிடைப்பதற்காக உத்தம் நகரில் வசிக்கும் கஜேந்தர் குமார் நய்யார் என்கிற மருத்துவர் போலி மருத்துவ சான்றிதழ்களை சமர்ப்பித்துள்ளார்.
கடந்த ஜூன் 20ஆம் தேதி, மருத்துவரின் போலி சான்றிதழ் விவகாரம் தொடர்பாக தென்கிழக்கு பகுதி போலீசார் அளித்த தகவலின் படி, டெல்லி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி ஜூலை 16க்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய டெல்லி குற்றப்பிரிவு போலீசார், போலிச்சான்றிதழ் வழங்கிய கஜேந்தர் குமார் நய்யார் என்கிற மருத்துவர் டெல்லி, த்வர்காவில் உள்ள NC மருத்துவமனையிலும், நொய்டாவில் உள்ள KS நர்சிங் ஹோமில் பணியாற்றி வந்தது கண்டறியப்பட்டது.
இதனை தொடர்ந்து, டெல்லி மருத்துவர்கள் கவுன்சில் இவரை நவம்பர் மாதம் வரையில் மருத்துவத்துறையில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளது. இந்த தகவலை டெல்லி குற்றப்பிரிவு துணை கமிஷனர் தெரிவித்தார்.
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…