எம்.எஸ்.தோனி உள்ளிட்ட பிரபலங்களின் பெயரில் போலி கிரெடிட் கார்டு மோசடி செய்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பிரபலங்களின் பெயரில் போலி கிரெடிட் கார்டுகளைப் பெற்று அதன்மூலம் பல லட்ச ரூபாய் மோசடி செய்த 5 பேர் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். எம்எஸ் தோனி, அபிஷேக் பச்சன், ஷில்பா ஷெட்டி, மாதுரி தீட்சித், மற்றும் இம்ரான் ஹஷ்மி உள்ளிட்ட பிரபலங்களின் பெயர்கள் மற்றும் பான் விவரங்கள் பயன்படுத்தப்பட்டு கிரெடிட் கார்டுகள் பெறப்பட்டுள்ளதாகவும் அதன் மூலம் 21.32 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் வாங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஒரு வினோதமான இணைய மோசடி வழக்கில், மோசடி குழுவினர் பல பாலிவுட் நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களின் பான் விவரங்களை, ஆன்லைனில் கிடைக்கும் ஜிஎஸ்டி அடையாள எண்களில் இருந்து வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்தமுறை மோசடி குழு, பிரபலங்களின் பெயரில் மோசடி செய்தது தெரியவந்துள்ளது என டெல்லி துணை போலீஸ் கமிஷனர் (டிசிபி) ஷஹாத்ரா ரோஹித் மீனா கூறினார்.
மேலும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். போலிஸுக்கு கிடைத்த தகவலின்படி குற்றம் சாட்டப்பட்ட புனீத், முகமது ஆசிப், சுனில் குமார், பங்கஜ் மிஷார் மற்றும் விஸ்வ பாஸ்கர் ஷர்மா என 5 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மோசடி நபர் கூகுள்- இலிருந்து பிரபலங்களின் ஜிஎஸ்டி விவரங்களை பெற்று அதில் இருக்கும் பான் எண் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களைக் கொண்டு போலியான கிரெடிட் கார்டு பெற்றது தெரியவந்தது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…