போலி முகவரி! போலி மொபைல் நம்பர்.! 3,338 கொரோனா நோயாளிகளை காணவில்லை.!
கொரோனா பரிசோதனைக்கான மாதிரி சேகரிக்கப்படும் போது, பலர் தங்களது முகவரி, மொபைல் நம்பரை மாற்றி தவறாக கொடுத்துவிட்டதால், தற்போது கொரோனா உறுதிசெய்யப்பட்ட சுமார் 3300 பேரை கண்டுபிடிக்கமுடியவில்லை என பெங்களூரு காவல்துறை அதிகாரி மஞ்சுநாத் பிரசாத் கூறியுள்ளார்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் அங்கு கொரோனா சோதனை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு கடந்த 14 நாட்களில் 16 ஆயிரமாக இருந்த கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையானது 27 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், பெங்களூரு நகரில் வசிக்கும் மக்களிடம் கொரோனா பரிசோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அதன் முடிவுகளும் வெளியாகிவிட்டன. ஆனால், அதில் கொரோனா உறுதிசெய்யப்பட்ட 3,338 பேரை கண்டுபிடிக்கமுடியவில்லை. என காவல்துறை உயர்அதிகாரி மஞ்சுநாத் பிரசாத் பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார்.
மாதிரி சேகரிக்கப்படும் போது, பலர் தங்களது முகவரி, மொபைல் நம்பரை மாற்றி தவறாக கொடுத்துவிட்டனர். அதனால், தற்போது கொரோனா உறுதிசெய்யப்பட்ட சுமார் 3300 பேரை கண்டுபிடிக்கமுடியவில்லை என காவல்துறை அதிகாரி மஞ்சுநாத் பிரசாத் கூறியுள்ளார்.