பிரதமர் நிவாரண நிதிக்கு பணம் அனுப்புபவரா நீங்கள்?! உஷார்.!
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பிரதமர் மோடி, பி.எம். கேர் என்கிற திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் நிவாரண உதவிகளை கேட்டுக்கொண்டார். இதற்கான வங்கிக்கணக்கையும், வங்கி கணக்கு இணையதள முகவரியையும் அறிவித்தார்.
இதனை தொடர்ந்து, பொதுமக்கள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் என பலர் தங்களால் முடிந்த நிதியுதவிகளை செய்துவந்தனர்.
இது தொடர்பாக மகாராஷ்டிரா மாநில சைபர் கிரைம் போலீசார் ஓர் அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். அதன்படி, பி.எம் கேர் என்கிற இணையதள கணக்கு போல பல போலி கணக்குகள் உருவெடுத்துள்ளனவாம். இது தொடர்பாக மும்பை, புனே, நாசிக், நாக்பூர் உட்பட பல இடங்களில் சுமார் 78 வழக்குகள் பதியப்பட்டுள்ளனவாம். ஆதலால் பிரதமர் நிவாரண நிதிக்கு பணம் அனுப்ப முயல்வோர் pmcares@sbi என்கிற ஒரிஜினல் இணையதளத்தை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். மேலும், பணம் அனுப்ப முயல்வோர் நன்கு ஆராய்ந்து பணம் அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.