நிதி நெருக்கடி என புதுச்சேரி மாநிலத்தில் தவறாக பிரச்சாரம்!
முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி மாநிலத்தில் நிதி நெருக்கடி என தவறாக பிரச்சாரம் செய்யப்படுவதாக கூறியுள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கலால் வரி மற்றும் பத்திரப்பதிவு வரி பெருமளவு குறைந்து விட்டதாகவும், இருப்பினும் அனைத்து திட்டங்களும் முறையாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் மத்திய அரசு மற்ற மாநில அரசுகளுக்கு 42 சதவீத மானியம் வழங்கும் நிலையில், புதுச்சேரிக்கு 27 சதவீதம் தான் மானியம் வழங்குவதாகவும், இதனால் ஏற்படும் நெருக்கடியை அரசு முறையாக சமாளித்து வருகிறது என்றும் நாராயணசாமி தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.