தோல்வி காங்கிரஸ் முகத்தில் எழுதப்பட்டுள்ள்ளது.! மக்கள் பாடம் புகட்டுவார்கள்.! அண்ணாமலை பேட்டி.!
கர்நாடக மக்கள் இந்த தேர்தலில் காங்கிரசுக்கு பதில் சொல்வார்கள். தோல்வி காங்கிரஸின் முகத்தில் எழுதப்பட்டுள்ளது. – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி.
கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பிரதான கட்சி தலைவர்கள் தங்கள் கட்சி சார்பாக மக்கள் மத்தியில் வாக்குறுதிகளை கூறி வருகின்றனர். அதே போல மற்ற கட்சியினர் மீது விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.
அண்மையில் கூட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே , பிரதமர் மோடி குறித்து தனது விமர்சனத்தை முன்வைத்தார். அதன் பிறகு பிரதமர் மீது எனக்கு தனிப்பட்ட மோதல் எதுவும் இல்லை. நான் அவரது கட்சியை தான் குறிப்பிட்டேன் என கூறியிருந்தார்.
இந்நிலையில், கர்நாடக தேர்தல் பொறுப்பாளராக பாஜக சார்பில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் மத்தியில் காங்கிரஸ் பற்றிய தனது விமர்சனத்தை முன்வைத்தார். அவர் கூறுகையில், தீங்கிழைக்கும் விமர்சனங்களுக்கு பிரதமர் மோடி ஒருபோதும் பதில் சொல்ல மாட்டார். ‘ என் குறிப்பிட்டார்.
மேலும், இம்மாதிரியான விமர்சனங்களுக்கு ஒவ்வொரு முறையும் மக்கள் தான் தக்க பதில் கூறி வருகின்றனர். இன்னும் காங்கிரஸ் பாடம் கற்கவில்லை. கர்நாடக மக்கள் இந்த தேர்தலில் காங்கிரசுக்கு பதில் சொல்வார்கள். தோல்வி காங்கிரஸின் முகத்தில் எழுதப்பட்டுள்ளது. என பிரதமர் மோடி குறித்து மல்லிகார்ஜுன் கார்கே கூறிய கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.