FACEBOOK,WHATSAPP அவதூறு கருத்து எதிரொலி !தயாராகும் புதிய சட்டம்…
சமூக வலைதளங்களில் பேஸ்புக், வாட்ஸ்-ஆப் உள்ளிட்ட அவதூறு கருத்துகள் தெரிவிப்பதற்கு எதிரான சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பேஸ்புக், வாட்ஸ்-ஆப், டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் தனிநபர்கள் குறித்து அவதூறு கருத்துகள் பரப்பப்படுவது அதிகரித்துள்ளது. இது குறித்து தொடர் புகார்கள் வந்ததை அடுத்து, இதற்காக புதிய சட்டத்தை இயற்ற முடிவு செய்துள்ள உள்துறை அமைச்சகம், புதிய சட்டவரைவை உருவாக்குமாறு சட்ட ஆணையத்தை கேட்டுக் கொண்டுள்ளது.
ஆன்லைனில் அவதூறு கருத்துகள் தெரிவிப்போர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, மக்களவை செயலாளர் டி.கே.விஸ்வநாதன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், சாதி, மதம், பாலினம், மொழி உள்ளிட்டவை தொடர்பாக அவதூறு கருத்து தெரிவித்தால், நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய சட்டம் இயற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.