எந்தவிதத்திலும் தலையிடுவதை ஏற்க முடியாது – மார்க் ஜூகர்பெர்க்குக்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடிதம்

Default Image

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூகர்பெர்க்குக்கு கடிதம்  எழுதியுள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த  பத்திரிக்கை ஓன்று , இந்தியாவில் வர்த்தக காரணங்களுக்காக, பாஜகவின் வெறுப்பு பேச்சுகள் இடம்பெறுவதை தடுக்க ஃபேஸ்புக்   நிறுவனம் நடவடிக்கை எடுப்பது இல்லை என்று  செய்தி வெளியிட்டது.இதனை காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் குறிப்பிட்டு ,இது ஜனநாயகத்தை சீர்குலைப்பதாக தெரிவித்தனர்.இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து  காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவில் , பாஜக கட்சியும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் பிரபல சமூக வலைத்தளங்களான பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பை கட்டுப்படுத்தி வருகின்றது என்று தெரிவித்தார் .மேலும்  அதன் மூலம் பாஜக போலி செய்திகளையும், வெறுப்புகளையும் வாக்காளர்களிடம் பரப்பி வருகின்றது. இறுதியாக இதுதொடர்பான உண்மையை அமெரிக்க ஊடகங்கள் செய்தி வாயிலாக வெளிப்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.

ஆனால் இந்த விவகாரத்தில்  காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூகர்பெர்க்குக்கு கடிதம்  எழுதினார்.அவரது கடிதத்தில்,இந்தியாவை பொருத்தவரை ஃபேஸ்புக் நிறுவனத்தின் செயல்பாடு பரபட்சமானதாக உள்ளது.மேலும் இந்தியாவின் தேர்தல் ஜனநாயகத்தில் குறுக்கிடுவதாகவும் அமைத்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் மட்டும் அல்லாமல் மற்ற கட்சிகளும் நாடாளுமன்றத்தில் கிளப்பியது. எனவே  ஃபேஸ்புக் நிறுவனம்  இந்தியாவில் உள்ள பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை குழு குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் உயர்மட்ட அளவில் விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூகர்பெர்க்குக்கு கடிதம்  எழுதியுள்ளார்.அவரது கடிதத்தில்,பிரதமர் மோடி மற்றும் மூத்த அமைச்சர்கள் மீது அவதூறு பரப்பப்பட்டு வருகிறது. ஃபேஸ்புக்கை சமூக விரோத சக்திகள் நிலவிவரும் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் செயல் படுத்தி வருகின்றன. பேஸ்புக் மூலம் சமூக ஒற்றுமையை சீர்குலைக்க அவர்கள் தங்களுக்கு கிடைத்துள்ள ஆயுதமாக ஃபேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவின் அரசியல் விவகாரங்களில் எந்தவிதத்திலும் ஃபேஸ்புக்  இந்தியா ஊழியர்கள்  தலையிடுவதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்