பாரதிய ஜனதாவுக்கு ராஷ்டிர ஜனதா தளம், விஜய் மல்லையா, நிரவ் மோடிக்கு ஏன் சம்மன் அனுப்ப முடியவில்லை என கேள்வி எழுப்பியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலின் போது டொனால்டு ட்ரம்பை ஆதரிக்கும் வகையில், பிரட்டனைச் சேர்ந்த ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா பேஸ்புக் பயனாளரின் தகவல்களை சட்டவிரோதமாக பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மார்க் ஸக்கர்பெர்க்கும் தவறு நடந்துள்ளதை ஒப்புக் கொண்டுள்ளார்.
இதனிடையே, 2019 மக்களவை தேர்தலில் தங்களுக்கு ஆதரவாக செயல்பட கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்துடன் காங்கிரஸ் ஒப்பந்தம் செய்துள்ளதாக, பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இந்தியாவின் தேர்தல் நடைமுறைகளில் விரும்பத்தகாத வகையில் ஃபேஸ்புக் உள்ளிட்ட எந்தச் சமூக வலைத்தளம் ஈடுபட்டாலும் அரசு சகித்துக் கொள்ளாது என்று தெரிவித்தார். இதில் மார்க் ஸக்கர்பெர்க்கு எதிராக சம்மன் அனுப்பப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் பாஜக அரசு, மோசடி செய்து வெளிநாடு தப்பிச் சென்றவர்களை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுப்பதில்லை என்று பீகார் முன்னாள் முதலமைச்சரும், லாலு பிரசாத் மகனுமான தேஜஸ்வி யாதவ் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி, “ ஃபேஸ்புக்கில் பாஜகவின் பாப்புலாரிட்டி குறைந்து விட்டது. அதனால் சம்மன் அனுப்பப்படும் என்று ஃபேஸ்புக் நிறுவனருக்கு சவால் விடுக்கிறார்கள். உண்மையில் இந்த அரசுக்கு வலிமை இருந்தால், நிரவ் மோடிக்கும், விஜய் மல்லையாவுக்கும் ஏன் சம்மன் அனுப்ப முடியவில்லை” என்று தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.இதற்கிடையே தற்போது புதிதாக கனிஷ்கர் நகைகடையும் மோசடி வழக்கில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…