FACEBOOK உலக நாடுகளில் தேர்தல்களின் நம்பகத்தன்மையை பாதுகாக்க உறுதி!
ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் தேர்தல்களின் நம்பகத்தன்மையை பாதுகாக்க பேஸ்புக் உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஃபேஸ்புக் நிறுவனம் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த நேரடியாகவோ மறைமுகமாகவோ முயன்றால் கடும் நவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எச்சரித்திருந்தார். மேலும், தேர்தல் நடைமுறைகளில் தலையிடுவது தெரிந்தால் பேஸ்புக் நிறுவனர் மார்க்ஜூக்கர் பெர்க்கை இந்தியா வரவழைத்து விசாரணை நடத்த சட்டத்தில் இடம் இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், சிஎன்என் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், அமெரிக்கா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் தேர்தல் நடைபெற உள்ளதை சுட்டிக்காட்டினார். மேலும் உலகில் எங்கு தேர்தல் நடந்தாலும், அவற்றின் நம்பகத்தன்மையை பாதுகாக்க ஃபேஸ்புக் உறுதிபூண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.