கண்கள் – பிறப்புறுப்புகளில் மிளகாய் பொடி.. பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.!
தெலுங்கானா : நாகர்கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது பழங்குடியினப் பெண் ஒருவாரமாக பொது இடத்தில் வைத்து மிக கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் கடந்த ஜூன் 8 ஆம் தேதி நடந்துள்ளது. ஆனால், ஜூன் 19ம் தேதி அன்று தான் காவல்துறையின் கவனத்திற்கு வந்திருக்கிறது. பின்னர், இந்த சம்பவத்திற்கான காரணத்தை விசாரணை மேற்கொண்டு, ஜூன் 20ம் தேதி அன்று குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் கைது போலீசார் கைது செய்துள்ளனர்.
விசாரணையில், சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்ட பழங்குடியினப் பெண், பாண்டி வெங்கடேசன் என்பரிடம் கடன் வாங்கிய பணம் தொடர்பான, தகராறில் இந்த கொடூர தாக்குதல் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
A Dalit woman was brutally beaten by her employer for not coming to work, chilli powder was thrown in her eyes, an attempt was also made to set her on fire by sprinkling diesel on her, this painful incident is from Telangana.
-Via Dalit Voice pic.twitter.com/pAG0qy3TLS
— We Dravidians (@WeDravidians) June 24, 2024
கடனை வாங்கிய ஈஸ்வரம்மா (பழங்குடியினப் பெண்) பணத்தை செலுத்த வலியில்லாமல், பாண்டி வெங்கடேசனின் செங்கல் சூளையில் வேலை செய்ய வேண்டும் (கொத்தடியமாக) என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், அதே செங்கல் சூளையில் வேலை செய்து கொண்டிருந்த தனது சகோதரியுடன் வாக்குவாதம் செய்த சில நாட்களுக்குப் பிறகு, ஈஸ்வரம்மா வேலை செய்யாமல் விட்டு வெளிநடப்பு செய்துள்ளார்.
இதனையடுத்து, கடன் பிரச்சனை தொடர்பாக தாக்கியவர்கள் ஈஸ்வரம்மாவை கடுமையாக தாக்கியதாகவும், பின்னர் அவரது கண்கள் மற்றும் பிறப்புறுப்புகளில் மிளகாய் பொடியை தடவி கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் தொடர்பாக பாண்டி வெங்கடேஷ் மற்றும் அவரது மனைவி, பாதிக்கப்பட்டவரின் சகோதரி மற்றும் கணவர் என நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.