ஓட்டுனர் இல்லாமல் ஓடிய பேருந்து…டயரில் சிக்கி ஒருவர் பலி…கண்கலங்க வைக்கும் வீடியோ..!
உத்தரபிரதேசம் : எதிர்பாராமல் நடக்கும் விபத்து சம்பவங்களில் சிலர் பலியாகும் செய்திகளை பார்த்தோம் என்றாலே நமக்கு வேதனையாகிவிடும். அப்படி தான் உத்தரபிரதேசம்ஹர்தோய் மாவட்டத்தில், பெட்ரோல் பங்கில் நின்று கொண்டிருந்த பேருந்து ஓட்டுநர் இல்லாமல் நகர்ந்து மோதி பெட்ரோல் நிலைய ஊழியர் தேஜ்பால் என்பவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று காலை பஸ் ஒன்று பெட்ரோல் பங்கிற்கு வந்து இருந்தது. அப்போது அருகில் பெட்ரோல் நிலைய ஊழியர் பைக் ஒன்றுக்கு காற்று அடித்து கொண்டு இருந்தார். பின், நின்று கொண்டு இருந்த அந்த பேருந்து திடீரென ஓட்டுநர் இல்லாமலே மெதுவாக நகர்ந்து அருகில் அமர்ந்து பைக்கிற்கு காற்று அடித்து கொண்டிருந்த ஊழியர் மிதி மோதியது.
பின்னர் நடைபாதையில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு பேருந்து மீது மோதியது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியுடன் வேகமாக பேருந்தை நோக்கி ஓடினார்கள். பிறகு இதில் படுகாயம் அடைந்த ஊழியர் தேஜ்பாலை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஓட்டுநர் இல்லாத பேருந்து ஒருவர் மீது மோதிய சம்பவம் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த அதிர்ச்சியான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இதுகுறித்து மாநகர இன்ஸ்பெக்டர் சஞ்சய் பாண்டே கூறுகையில், சக்கரங்களுக்கு முன்பு போடப்பட்டிருந்த செங்கற்கள் அகற்றப்பட்டதாலும், பஸ் நின்ற இடத்துக்கு அருகே சரிவு இருந்ததாலும் விபத்து ஏற்பட்டது என கூறினார்.
Disturbing Visuals Show Driverless Bus Running Over Petrol Pump Employee#Hardoi #uttarpradesh #accident #cctv pic.twitter.com/tcVr75tF13
— Republic (@republic) July 5, 2024