கேரளாவில் ‘மிக அதிக மழை’ பெய்யும், 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்- இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு.!
கேரளாவில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிக அதிக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கடந்த 12 மணி நேரத்தில் மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது. எனவே சாலியார் ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்ததை அடுத்து, ஆற்றின் அருகே வசிக்கும் குடும்பங்களை பல்வேறு முகாம்களுக்கு மாற்றியுள்ளனர். இந்த நிலையில் தற்போது கேரளாவில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிக அதிக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதனை தொடர்ந்து கேரளாவின் இடுக்கி, வயநாடு மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், மற்ற மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். எனவே பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு, மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்குள் தங்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது