ஒடிசாவில் அடுத்த வாரம் கன மழை பெய்ய வாய்ப்பு..வெள்ள அபாய எச்சரிக்கை.!
அடுத்த வாரம் ஒடிசா மாநிலத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதிய குறைந்த காற்றழுத்த பகுதி வங்காள விரிகுடாவில் உருவாகிறது. இதனால், அடுத்த வாரம் தொடக்கத்தில் ஒடிசாவின் பல பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது.
இந்நிலையில், இந்த முன்னறிவிப்பைத் தொடர்ந்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் சமாளிக்க முழுமையான எச்சரிக்கையாக இருக்குமாறு மாநில அரசு அந்தந்த மாவட்ட அதிகாரிகளை கேட்டுக்கொண்டது.
இந்த, குறைந்த அழுத்தப் பகுதியின் உருவாக்கம் காரணமாக, மத்திய வங்காள விரிகுடாவில் காற்றின் வேகம் 40-50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தபட்டுள்ளது.