மாநிலங்களவை தேர்தல் :குஜராத்தில் இருந்து பாஜக சார்பில் போட்டியிடும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வேட்புமனு தாக்கல்
குஜராத்தில் இருந்து பாஜக சார்பில் போட்டியிடும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
தமிழகத்தை சேர்ந்த ஜெய்ஷங்கர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார்.பின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்.
இதனால் பாஜகவில் இணைந்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை குஜராத் மாநில ராஜ்யசபா வேட்பாளராக பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டார்.இவர் அண்மையில் மத்திய அமைச்சரவையில் பதவி வகித்து வரும் நிலையில் தற்போது வேட்பாளாராக களமிறங்க உள்ளார்.
இந்த நிலையில் மாநிலங்களவை தேர்தலில் குஜராத்தில் இருந்து பாஜக சார்பில் போட்டியிடும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.