நீட் தேர்வில் விண்ணப்பிக்க மாணவர்களுக்கு கால அவகாசம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு செப்டம்பர் 12 ஆம் தேதி நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்த தேர்விற்கு கடந்த ஜூலை மாதம் 13 ஆம் தேதி மாலை 5 மணியிலிருந்து ஆகஸ்ட் 6 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது நீட் தேர்விற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீட் தேர்வு விண்ணப்பத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள ஆகஸ்ட் 11 முதல் 14 ஆம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் https://ntaneet.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
“நீட் (யுஜி), 2021, சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறை அமைப்புகளால் அறிவிக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகளின் படி எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், பி.ஏ.எம்.எஸ், பி.எஸ்.எம்.எஸ், பம்ஸ் மற்றும் பி.எச்.எம்.எஸ் படிப்புகளில் சேருவதற்காக என்.டி.ஏ ஆல் நடத்தப்பட உள்ளது.
கொரோனா வைரஸை கருத்தில் கொண்டு தேர்வு மையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் ஒரு அறையில் மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…