வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு..!
2019-2020 ஆம் ஆண்டிற்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிப்பு.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், நாள் ஒன்றில் சராசரியாக 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், சில தளர்வுகளுடன் பொதுமுடக்கம் அமலில் உள்ளது.
இதன் காரணமாக இந்தியாவில் உள்ள பெரும்பாலான தொழில் நிறுவனங்களுக்கும் வருவாய் குறைந்து, பண நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்ட வருமான வரித்துறையினர், 2019-2020 ஆம் ஆண்டிற்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தனர்.
Understanding & keeping in mind the times that we are in, we have further extended deadlines. Now, filing of ITR for FY 2019-20 is extended to 30th Nov, 2020. We do hope this helps you plan things better.#ITDateExtension#FacilitationDuringCovid#WeCare #IndiaFightsCorona pic.twitter.com/ZoGBpok3V7
— Income Tax India (@IncomeTaxIndia) July 4, 2020