மத்திய அரசு ஊழியர்களுக்கான பயணப்படி (TA) உரிமைகோரல்களை சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
ஓய்வு பெற்ற 60 நாட்களில் இருந்து 180 நாட்கள் வரை உரிமைக்கோரல்களை சமர்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பு.
ஓய்வு பெற்ற ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் சொந்த ஊருக்கு சென்று குடியேறுவதற்காக மேற்கொள்ளப்படும் பயணங்களுக்கு உரிமைகோரல்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பது தொடர்பாக பல்வேறு அரசுத்துறை இடமிருந்தும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருந்தது.
இந்த கோரிக்கைகளை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஊழியர்களுக்கான பயணப்படி உரிமைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. அதன்படி ஒருவர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற 60 நாட்களில் இருந்து 180 நாட்கள் வரை உரிமைக்கோரல்களை சமர்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க முடிவு செய்துள்ளது. இடமாற்றம் மற்றும் பயிற்சி ஆகியவற்றில் TA உரிமைகோரலை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் 60 நாட்கள் நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஜூன் 15-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.
60 நாட்களுக்குள் TA உரிமைகோரல்களை சமர்ப்பிப்பது மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகவும் சிரமமாக இருந்ததால் ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த நடவடிக்கை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.