வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு.!

Default Image

வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதற்கான ஜூலை 31 ல் இருந்து நவம்பர் 30 ஆம் தேதி வரை நீடிக்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

பிரதமர் மோடி அறிவித்த, ரூ.20 லட்சம் கோடி நாட்டின் பொருளாதார மேம்பாட்டு திட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து வெளியிட்டுள்ளார். இதில், முதல்கட்டமாக சிறு,குறு தொழில் நிறுவனங்களுக்கான 15 முக்கிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். பின்னர் 5 அம்ச நோக்கங்களுடன் பொருளாதார வளர்ச்சி திட்டங்கள் கவனம் செலுத்தப்படுகின்றன. என்றும் சுயசார்பு பாரதம் என்ற பெயரில் ரூ.20 லட்சம் கோடிக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.

இதையடுத்து, வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதற்கான ஜூலை 31 ல் இருந்து நவம்பர் 30 ஆம் தேதி வரை நீடிக்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ஜூலை 31, ஆகஸ்ட் 31 வரை வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்பவர்களுக்கு நவம்பர் 30 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வருமானவரி வழக்குகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான விவாதத் சே விஸ்வாஸ் திட்டம் நீடிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். விவாதத் சே விஸ்வாஸ் திட்டம் டிசம்பர் 31 வரை நீடிக்கப்படுவதாக கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்