வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு ….!

Default Image

2021 – 2022 ஆம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 

இந்திய வருமான வரி சட்டத்தின்படி, 60 வயதுக்கு குறைவாக உள்ள தனிநபர்களின் ஆண்டு வருமானம் 2.50 லட்சம் அல்லது அதற்கு மேல் இருந்தால் அவர்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது அவசியம். அது போல 60 – 80 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ஆண்டு வருமானம் 5 லட்சத்திற்கு மேல் இருந்தால், அவர்களும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஆண்டுதோறும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் முந்தைய ஆண்டுக்கான வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும் என்பது விதி.

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் வருமான வரியை தாக்கல் செய்வதற்கு அவகாசம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2020 – 2021 ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு செப்டம்பர் 10-ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்த நிலையில், இன்னும் முழுமையாக வருமான வரி தாக்கல் நிறைவடையாத நிலையில் தற்போது மீண்டும் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 2020- 2021 ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை டிசம்பர் 31 தேதி வரை தாக்கல் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்