#BigBreaking: கோவிஷீல்டு தடுப்பூசிக்கான 2-வது டோஸ் செலுத்துவதற்கான கால அளவை நீட்டிப்பு!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
கோவிஷீல்டு தடுப்பூசி 2வது டோஸ் செலுத்துவதற்கான கால அளவை 6-8 வாரங்கள் வரை நீடிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு, கடிதம் எழுதியுள்ளது.
இந்தியாவில் தற்பொழுது கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கிய நிலையில், கொரோனா பரவல் அதிகம் உள்ள மாநிலங்களில் சில தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மேலும், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியின் 2 ஆம் செலுத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி 2வது டோஸ் செலுத்துவதற்கான கால அளவை 4 வாரங்கள் இருக்கும் நிலையில், அதனை 6-8 வாரங்கள் வரை நீடிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு, கடிதம் எழுதியுள்ளது.