#BREAKING: வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு..!
கொரோனா வைரஸ் காரணமாக மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தியது. பின்னர், ஜூன் மாதத்திலிருந்து ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் வரி செலுத்துவோர் தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய பல சிரமங்களை எதிர்க்கொண்டனர்.
இதனால், வருமான வரி கணக்தை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு மே மாதம் வரை முதலில் நீட்டிக்கப்பட்டது. பின் பல முறை இந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டு கடைசியாக டிசம்பர் 31ம் தேதி அதாவது நாளை வரை காலக்கெடு வழங்கபட்டது. இந்நிலையில், வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் அதற்கான அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக வருமான வரிக்கணக்கு தாக்கல் செலுத்துவோர் தொடர்ந்து எதிர்கொள்ளும் சவால்களைக் கருத்தில் கொண்டு, அரசு வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கியுள்ளது. அதன்படி, 2019-2020 ஆண்டிற்கான வருமான வரி வருமானத்தை செலுத்துவதற்கான தேதி ஜனவரி 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.